Home Spiritual விநாயகர் வழிபாடு தொடர்பான புராதன உண்மைகள்

விநாயகர் வழிபாடு தொடர்பான புராதன உண்மைகள்

விநாயகர் பல யுகங்களைக் கடந்தவர் என்பதால், காலந்தோறும் அவரை வழிபடுவது பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் மக்கள் விநாயகரை மட்டுமே வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகே விநாயகர் வழிபாடு காணப்படுவதாக சான்றுகள் கிடைத்துள்ளன.

இருப்பினும் விநாயகர், நான்கு யுகங்களின் அதிபதியாக திகழ்வதாக புராணங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

இதன்படி கிருதாயுகத்தில் காசிபர் – அதிதி தம்பதிகளின் மகனாகவும் (மகோற்கடர்), திரேதாயுகத்தில் அம்பிகையின் மகனாகவும் பிறந்து மயிலோடு விளையாடுவதில் நாட்டம் கொண்டவராகவும் (மயுரேசர்), துவாபரயுகத்தில் பரராச முனிவர்- வத்ஸலா தம்பதியினரின் வளர்ப்பு குமாரராகவும் (விக்னராசர்), கலியுகத்தில் சிவன் – பார்வதிதேவியின் மகனாகவும் (விநாயகர்) அவரது பிறப்பு நீண்டுகொண்டே வந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும், இத்தகைய வழிபாட்டை ‘காணாபாத்யம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -