Home Srilanka வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது

வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது

திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருட்கள் வைத்திருந்த மூவரை நேற்று (26) கைது செய்துள்ளதாக அப்பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 1,210 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் மகமாயபுர, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரும், புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 430 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹமாஸ் நகர் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரையும், அதேபோன்று மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 350 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் அக்கரைச்சேனை, மூதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, திருகோணமலை மற்றும் நீதிமன்ற நீதிவான்கள் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -