Home Srilanka 13 சீனா மற்றும் தாய்லாந்து பிரஜைகள் கைது!!

13 சீனா மற்றும் தாய்லாந்து பிரஜைகள் கைது!!

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 13 பிரஜைகள் கல்கிசையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கல்கிசை பகுதியில் சோதனை நடத்தப்பட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிசை பகுதியிள்ள விடுதி ஒன்றில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தேடுதல் நடத்தியபோது 13 வெளிநாட்டவர்கள் விசா இன்றி தங்கியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

குறித்த இடத்தில் ஒன்பது பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 10,300 சிகரெட்டுக்களை வைத்திருந்துள்ளார்.

சந்தேக நபர்கள் 20 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -