ஹொங்கொங், கட்டார் மற்றும் குவைட் ஆகிய நாடுகளில் இருந்து மேலும் 211 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஹொங்கொங்கில் இருந்து 42 பேர் நேற்று (26) இரவு 9.30 க்கும், அதிகாலை 1.45 க்கு கட்டார் மற்றும் குவைட்டில் இருந்து 12 பேரும் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அதேபோல், அதிகாலை 2.36 க்கும் கட்டார் மற்றும் குவைட்டில் இருந்து மேலும் 157 இலங்கையர்கள் மற்றுமொரு விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.