- Advertisement -
Home International 463 மில்லியன் பிள்ளைகளுக்கு இணையவழி படிப்பை அணுக முடியாத நிலை; ஐ.நா தெரிவிப்பு

463 மில்லியன் பிள்ளைகளுக்கு இணையவழி படிப்பை அணுக முடியாத நிலை; ஐ.நா தெரிவிப்பு

- Advertisement -

உலகளாவிய ரீதியில் 463 மில்லியன் பிள்ளைகள் மின் உபகரண வசதிகள் இல்லாததால் இணையவழி படிப்பை மேற்கொள்ள முடியாதுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு பாடசாலைகள் மூடப்பட்டமையினால் உலகெங்கிலும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியினருக்கு இணையவழி படிப்பு கிடைக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 463 மில்லியன் பிள்ளைகளுக்கு தொலைதூரக் கல்வியைத் தொடர மின் உபகரண வசதிகள் இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக யுனிசெப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது.

உலகளாவிய ரீதியில் “பல மாதங்களாக பிள்ளைகளின் கல்வி முற்றிலுமாக சீர்குலைந்து போயுள்ளது எனவே துரிதமாக அவர்களுக்கு கல்வியை வழங்குவது இன்றியமையாதது என ஐ.நா. குழந்தைகள் நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் ஹென்றிட்டா போர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தசாப்தங்களில் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களில் இதன் விளைவுகளை உணரமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகளவில் 1.5 பில்லியன் பிள்ளைகள் தொற்றுநோயால் ஏற்படும் பூட்டுதல் அல்லது பாடசாலை மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

தொலைதூரக் கல்விக்கான பிள்ளைகளின் அணுகுமுறையிலுள்ள புவியியல் வேறுபாடுகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவின் சில பகுதிகளை விட ஐரோப்பாவில் மிகக் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

இணையம், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பொதுவான அணுமுறையின் அடிப்படையில் சுமார் 100 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் கீழ் ஐ.நா. வின் மேற்படி அறிக்கை அமைந்துள்ளது.

போதுமான வசதிகள் உள்ள குழந்தைகள் கூட தொலைக் கல்விக்கு பிற தடைகளை சந்திக்க நேரிடும் – வீட்டில் ஒரு நல்ல கல்விச்சூழல் இன்மை, குடும்பத்திற்காக பிற வேலைகளைச் செய்ய அழுத்தம், கணினி ஏற்படும் தொழில்நுட்ப ஆதரவு இல்லாதது போன்றவற்றை யுனிசெப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலகெங்கிலும் இணையவழி கல்வியை அணுக முடியாத மாணவர்களில் 67 மில்லியன் பேர் கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிலும், 54 மில்லியன் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவிலும், 80 மில்லியன் பசிபிக் மற்றும் கிழக்கு ஆசியாவிலும், 37 மில்லியன் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிலும், 147 மில்லியன் தெற்காசியாவிலும், 13 மில்லியன் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனிலும் காணப்படுகின்றனர்.

இதேவேளை அமெரிக்கா அல்லது கனடாவுக்கான புள்ளிவிவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் தளத்தப்படும் போது தனிப்பட்ட வகுப்புகள் உட்பட பாடசாலைகளை மீண்டும் நடத்துவதற்கு முன்னுரிமை அளிப்பட வேண்டும் என யுனிசெப் அரசாங்கங்களை வலியுறுத்தியுள்ளது.

மீண்டும் கட்டுப்பாடுகள் தளத்தப்படும் சாத்தியமில்லாத இடத்தில், அரசாங்கங்கள் “இழந்த கற்றல் செயற்பாட்டு நேரத்தை ஈடுசெய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here