- Advertisement -
Home Srilanka ஆனைவிழுந்தான் சரணாலய பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மண்ணகழ்வு – ஒருவர் கைது

ஆனைவிழுந்தான் சரணாலய பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மண்ணகழ்வு – ஒருவர் கைது

- Advertisement -

ஆனைவிழுந்தான் சரணாலய பகுதியில், சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முன்னெடுக்கபட்ட நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி, ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் 0.697 ஹெக்டேயர் நிலப்பரப்பில், சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மண்ணகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதோடு, அவற்றினை முன்னெடுக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், குறித்த நிலப்பரப்பில் ஆயிரத்து 397 ஹெக்டேயர் நிலப்பரப்பு, 1997 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here