Home International ஆயுதக் கும்பலால் கடத்தப்பட்ட 132 பேரை மீட்ட நைஜீரிய படையினர்

ஆயுதக் கும்பலால் கடத்தப்பட்ட 132 பேரை மீட்ட நைஜீரிய படையினர்

க்வா இபோம் மாநிலத்தில் ஆயுதக் கும்பல்களால் கடத்தப்பட்ட 132 பேரை நைஜீரியா பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.

மாநில காவல்துறைத் தலைவர் இமோஹிமி எட்கல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயுதமேந்திய கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆயுதக் கும்பல்களால் பிணைக் கைதிகளாக அழைத்துச் சென்றதாக எட்கல் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகளில் குறைந்தது 13 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும், கணிசமான அளவு வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2008 ஆம் ஆண்டு முதல் நைஜீரியாவில் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான வன்முறை ஒரு கடுமையான பாதுகாப்பு நெருக்கடியாக மாறியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -