Home India இந்திய பொலிஸார் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்; சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை!

இந்திய பொலிஸார் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்; சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை!

இந்திய பொலிஸார் கடுமையான மனித உரிமை மீறல்களை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஆரம்ப பகுதியில் புதுடெல்லியில் மதங்களுக்கிடையிலான கலவரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை இந்திய பொலிஸார் சித்திரவதைக்குட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டம் தொடர்பாக புதுடெல்லியில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த பெப்ரவரிமாதம் புது டெல்லியில் இடம்பெற்ற மத கலவரம் தொடர்பில் புதுடெல்லி பொலிஸாரிடம் சர்வதேச மன்னிப்புச்சபை விளக்கம் கோரியிருந்தது.

எனினும் புதுடெல்லி வன்முறை சம்பவத்தில் பொலிஸார் கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதுடன் வன்முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் பல்வேறு தசாப்தங்களுக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான தாக்கதலாகவும் இந்த சம்பவம் கருதப்படுகின்றது.

இந்த நிலையில் எந்தவித தவறுகளையும் முன்னெடுக்கவில்லை என இந்திய பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -