Home India இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன கண்காணிப்பு கருவிகளை கொள்முதல் செய்ய இந்தியா திட்டம்!

இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன கண்காணிப்பு கருவிகளை கொள்முதல் செய்ய இந்தியா திட்டம்!

அதிநவீன ஃபால்கன் கண்காணிப்பு கருவிகளை இஸ்ரேலிடம் இருந்து கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதன்படி குறித்த கருவிகள் சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கருவிகள் மூலம் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதியை கடக்காமல் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள போர் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக விமானப்படையின் மூத்த அதிகாரிகள் கூறுகையில் “இஸ்ரேலிடமிருந்து மேலும் 2 ஃபால்கன் கண்காணிப்பு விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான பேச்சுவாா்த்தைகள் இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளன. இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிடமிருந்து 3 ஃபால்கன் ரக கண்காணிப்பு கருவிகளை இந்திய விமானப்படை ஏற்கெனவே கொள்முதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -