மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளாத்திக்குளம் பகுதியில் காட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ள போதும் இரண்டு நாட்களாக அவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள், நண்பர்கள் காட்டுப்பகுதியில் அவரைத் தேடியுள்ளனர்.
இதன்போது அவர் காட்டுப்பகுதியில் பாரிய காயங்களுடன் சடலமாக கிடந்தமை நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மடு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் விளாத்திக்குளம் பகுதியை சேர்ந்த சிறிரங்கன் வியேந்திரன் (வயது 36) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இவர் தேன் எடுப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற நிலையில் கரடியின் தாக்குதலிற்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.