Home Sports கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்து வீரர் விலகல்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்து வீரர் விலகல்!

ஐ.பி.எல். ரி-20 தொடரிலிருந்து, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹரி கர்னி விலகியுள்ளார்.

தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதனால் ஐபிஎல் மற்றும் ரி-20 பிளாஸ்ட் ஆகிய இரு தொடர்களிலிருந்தும் விலகியுள்ளார். அத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்துக்குத் தான் செல்லப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த வருட ஐபிஎல் தொடரில் விளையாடிய இங்கிலாந்தைச் சேர்ந்த 33 வயதான ஹரி கர்னி, 8 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். தொடர், எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -