- Advertisement -
Home Srilanka சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்; விக்கிக்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்; விக்கிக்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை

- Advertisement -

கடந்த காலங்களில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை சி.வி.விக்னேஸ்வரன் மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

9ஆவது நாடாளுமன்றின் முதலாவது சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மொழி தொடர்பாக முன்வைத்த கருத்துக்கு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட சரத் பொன்சேகா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதாவது, நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அதே நிலைமைதான் ஏற்பட்டது. அந்தவகையில், விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது. அவருக்கு அதற்கான வயதுமில்லை காலமும் இல்லை. மேலும் உங்களிடம் உள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள். நாட்டிலுள்ள சிங்களவர்களின் நிலையை குறைத்து மதிப்பிடவேண்டாம். அவ்வாறு குறைத்து மதிப்பிட்டால் மோசமான விளைவுகளை நிச்சயம் நீங்கள் எதிர்கொள்வீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here