Home Srilanka ஜெயசேகரவை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் உத்தரவு

ஜெயசேகரவை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகரவை பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கு சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன இன்று உத்தரவிட்டார்.

சபாநாயகர் இன்று பாராளுமன்றில் ஜெயசேகரவை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதைத் தடுக்க சிறைச்சாலை திணைக்களத்துக்கு முடியாது என்றும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகரவை பாராளுன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கு முன்னர் உத்தரவிட்டபட்டது.

எனினும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பிரேமலால் ஜெயசேகர பாராளுமன்ற அமர்வுகளின்போது அழைத்து வரப்படவில்லை.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -