டிக் டொக் (tik tok) நிறுவனத்தை வாங்கும் திட்டம் தமது நிறுவனத்துக்கு இல்லை என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியாவில் கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் டிக்டொக் செயலியின் வர்த்தக நடவடிக்கைகளை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் உள்ளிட்ட பிற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில், கூகுளின் பிரதான நிறுவனமான அல்பபெட் (alferbet), டிக்டொக்கில் குறைந்த அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டதாகவும் தவல்கள் வெளியாகியிருந்தன.
குறித்த இந்த தகவலை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.