- Advertisement -
Home International தனது இரு மகள்களை கொன்றுவிட்டு 12 ஆண்டுகள் தலைமறைவான டாக்ஸி சாரதி கைது!

தனது இரு மகள்களை கொன்றுவிட்டு 12 ஆண்டுகள் தலைமறைவான டாக்ஸி சாரதி கைது!

- Advertisement -

தனது இரு மகள்களை கொன்றுவிட்டு 12 ஆண்டுகள் தலைமறைவான டாக்ஸி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

எகிப்தியரான யாசர் அப்தெல் சயீத் கடந்த 2008 ஆம் ஆண்டில் தமது மகள்கள் சாரா யாசர் சயீத்(17), மற்றும் அமினா யாசர் சயீத்(18) ஆகியோரை சுட்டுக் கொன்ற மறுநாளே அவரை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் சம்பவத்திற்கு பிறகு அவர் மாயமான நிலையில், 2014 ஆம் ஆண்டு தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீண்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு, டெக்சாஸ் மாகாணம் ஜஸ்டின் பகுதியில் இருந்து உறவினர்கள் இருவருடன் அப்தெல் சயீத் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது 63 வயதாகும் அப்தெல் சயீத் கூடிய விரைவில் டல்லாஸ் கவுண்டி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்.

சம்பவத்தன்று தமது இரு மகள்களையும் ஹொட்டலில் உணவருந்தலாம் என கூறி அழைத்துச் சென்று, துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு சயீத் தலைமறைவானார்.

அமெரிக்க கலாச்சாரத்தில் தமது மகள்கள் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால், தந்தை தங்களை துன்புறுத்தலுக்கு இரையாக்கியதாக மகள்களில் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்து அமினா உடனையே இறந்துள்ளார். ஆனால், சாரா இறப்பதற்கு முன்னர் பொலிசாரை தொடர்புகொண்டு தந்தைக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொல்லப்பட்ட இளம்பெண்களின் தாயார், பாட்ரிசியா ஓவன்ஸ், சயீத் கைது செய்யப்பட்டதைக் கேட்டு மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார்.

இனிமேல் தமது மகள்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...

வெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...

சடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி

நானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...

சஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...

20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here