- Advertisement -
Home Srilanka தமிழுக்காக இன்னும் விலைகொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்- செல்வம் எம்.பி. சபையில் எச்சரிக்கை!

தமிழுக்காக இன்னும் விலைகொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்- செல்வம் எம்.பி. சபையில் எச்சரிக்கை!

- Advertisement -

தமிழ் மொழியை இழிவுபடுத்திப் பேசுவதற்கு யாரும் முனைய வேண்டாம் எனவும் தமிழுக்காக இன்னும் விலைகொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

9ஆவது நாடாளுமன்றின் முதலாவது சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மொழி தொடர்பாக முன்வைத்த கருத்துக்கு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், “சி.வி.விக்னேஸ்வரன் ஐயா, சபை அமர்வில் தன்னுடைய உரையிலே தமிழ் மொழி முதன்மையானது என்று கூறியபோது இங்கு பல எதிர்ப்புக்கள் எதிர்க்கட்சியில் இருந்து உருவானது உண்மையிலே கவலை தருகின்றது. எங்களுடைய மக்கள் நம்பிக்கையோடு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருந்தார்கள்.

என்னுடைய உரிமை தமிழ், என்னுடைய இந்த மண்ணை காப்பாற்றுவதற்கான செயற்பாட்டினை யாருமே தடுக்க முடியாது. என்னுடைய தமிழ் செம்மொழியாக்கப்பட்டுள்ளது. முதன்மை மொழி என்று சொல்வதிலே எனக்கு பெருமை இருக்கிறது. அந்த வகையிலேதான் சி.வி.விக்னேஸ்வரனும் தன்னுடைய கருத்தை சொல்லியிருந்தார்.

சிங்கள மொழி எப்படி உங்களுக்கு பெறுமதியாக இருக்கிறதோ, அதேபோல் எங்களுக்கும் தமிழ் மொழி முதல்மொழி என்று சொல்வதில் பெருமை கொள்வதோடு இறுமாப்பும் கொள்கிறோம்.

இந்த விடயங்களுக்கு நாங்கள் எத்தனையோ விலையைக் கொடுத்திருக்கிறோம். எத்தனையோ உடைமைகளை இழந்திருக்கிறோம். இந்த மண்ணுக்கும் இந்த மொழிக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்ததன் அடிப்படையிலேதான் இந்த இனப் பிரச்சினை எழுந்தது.

அந்தவகையிலே யாரும் எங்களுடைய மொழியை கொச்சைப்படுத்த வேண்டாம். ஏனென்றால் அதற்காக பெரும் விலை கொடுத்துள்ளோம். அதற்காக இன்னும் விலை கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம் என்பதை தெரிவிக்கின்றேன்.

எனவே, எங்களுடைய மொழி சம்பந்தமாக யாருமே அதை இழிவுபடுத்திப் பேசுவதற்கு முனைய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

ஆளும் கட்சியில்கூட இதுபற்றி பேசப்படவில்லை. எதிர்க்கட்சியிலே எங்களுடைய மக்கள் வாக்களித்து அவருடைய கௌரவத்தை காப்பாற்றிய நிலையில் அங்கிருந்து இவ்வாறு கருத்துக்கள் வருவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here