கொரோனா அச்சத்துக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு தொடர்ச்சியாக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி இத்தாலி-மிலன், பிரிட்டன்-லண்டன், ஜப்பான்-டோக்கியோ, மாலைதீவு-ஆண், ஜேர்மன்-பிராங்போர்ட், பிரான்ஸ்-பாரிஸ், அவுஸ்திரேலியா-சிட்னி ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும்.
இந்த இடங்களுக்கு பயணிக்க விரும்பும் பயணிகள் கொழும்பு, காலி அல்லது கண்டியில் உள்ள விமான அலுவலகங்களை அல்லது இணையத்தளம் ஊடாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.