- Advertisement -
Home Srilanka பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கான இணையவழி ஆய்வரங்கம் நாளை ஆரம்பம்!

பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கான இணையவழி ஆய்வரங்கம் நாளை ஆரம்பம்!

- Advertisement -

ஆய்வு மாணவர்களுக்கான இணையவழி ஆய்வரங்கம் நாளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதப் பண்பியல் ஆய்வுத்துறைகளில் முக்கியத்துவம் மிக்க ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுவரும் தமிழ்நாட்டின் பிரதானமான ஆய்விதழுமான ‘மணற்கேணி’ இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

ஆய்வுவெளி – ஆய்வு மாணவர்களுக்கான குறித்த இணையவழி ஆய்வரங்கம்” நாளை (சனிக்கிழமை) ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்களும், இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர்களும் கலந்து கொண்டு தமது ஆய்வுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செல்லத்துரை சுதர்சனின் ஒருங்கிணைப்பில் இடம்பெறும் இந்த ஆய்வரங்கில், அந்தப் பல்கலைக்கழகத்தின் முதுதத்துவமானி ஆய்வாளர்களான வி.விமலாதித்தன், த.அருள்விழி ஆகியோரும் கலாநிதிப்பட்ட ஆய்வாளர்களான ஏ. அனுசாந்தன், த.ஜீவராஜ் ஆகியோரும் தமது ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

தொல்காப்பியம், குறுந்தொகை, கம்பராமாயணம், திருவாசகம், திருப்புகழ் ஆகிய பழந்தமிழ் நூல்கள் தொடர்பான ஆய்வுகள் மட்டுமன்றி, பழந்தமிழரின் போரியல், மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் போன்றனவும் இந்த ஆய்வுரைகளின் பேசுபொருளாக அமைகின்றன.

”ஆய்வுவெளி – ஆய்வு மாணவர்களுக்கான இணையவழி ஆய்வரங்கத்தின்” கருத்தாளர்களாக, இலங்கையின் மூத்த மொழியியல் அறிஞரும் பேராசிரியருமான எம்.ஏ. நுஃமானுடன், பேராசிரியர் வ.மகேஸ்வரன், பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன், பேராசிரியர் சோதிமலர் ரவீந்திரன் மற்றும் கலாநிதி செல்லத்துரை சுதர்சன் ஆகியோருடன் இந்தியாவின் சிரேஷ்ட ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் பங்கேற்கின்றமை சுட்டிக்காட்டத் தக்கது.

நாளைய தினம் ஆரம்பமாகும் இந்த ஆய்வரங்கம் எதிர்வரும் 09-09-2020 ஆம் திகதியன்று நிறைவடையும் என்பதுடன், நாள்தோறும் மாலை 7 மணிக்கு ஆய்வரங்கச் சொற்பொழிவுகள் இணையவழியாக ZOOM மென்பொருள் மூலம் இடம்பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தனது 59 வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு !

‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இரு வாரங்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here