பாதாள உலக குழு உறுப்பினர் ´பொடி லெசி´ மற்றும் ஜயலத் சுத்தா ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பலபிடிய பகுதியில் குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரி-56 ரக துப்பாக்கி, 98 ரவைகள், கைக்குண்டு உள்ளிட்ட சில ஆயுதங்கள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரின் வீட்டில் இருந்து இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதி விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளாார்.