- Advertisement -
Home Srilanka மட்டக்களப்பு மாவட்டத்தில் 2089 பட்டதாரிகளுக்கு நியமனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2089 பட்டதாரிகளுக்கு நியமனம்!

- Advertisement -

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நாடு முழுவதுக்குமான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்குவதற்கு அறிவிக்கப்பட்ட நியமனங்கள் எதிர்வரும் இரண்டாம் திகதி வழங்கப்படவுள்ளது.

நியமனங்கள் வழங்கப்படுகின்ற பட்டதாரிகள் தலைமைத்துவப்பயிற்சி, முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி, மக்கள் தொடர்பாடல் பயிற்சி மற்றும் அரசாங்க திணைக்களங்களின் கட்டமைப்பு தொடர்பான பயிற்சிகளின் பின்னர் அரச திணைக்களங்களுக்கு இணைப்பு செய்யப்படுவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களுக்கு மொத்தமாக 2089 வேலையற்ற பட்டதாரிகள் இனைப்புச் செய்யப்படவுள்ளனர். உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் இனையத்தளத்தில் வெளியிடப்பட்ட பேர் விபரங்களின் அடிப்படையில் இந்த நியமனங்கள் இடம் பெறவுள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 441 பேரும் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு 111 பேரும் ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு 142 பேரும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு 480 பேரும் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு 150 பேரும் பட்டிருப்பு பிரதேச செயலகத்திற்கு 103 பேரும் வவுனதீவு பிரதேச செயலகத்திற்கு 63 பேரும்

கிரான் பிரதேச செயலகத்திற்கு 63 பேரும் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு 116 பேரும் வாகரை பிரதேச செயலகத்திற்கு 21 பேரும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு 61 பேரும் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு 193 பேரும் ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு 123 பேரும் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலத்திற்கு 22 பேரும் என மொத்தமாக 2089 பேர் நியமத்தினை பெறவுள்ளனர்.

பட்டதாரிகள் தங்களின் பிரதேச செயலகங்களுக்கு சென்று தங்களின் நியமன கடிதங்களை நேற்று முதல் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா மாவட்ட ஊடக பிரிவிற்கு தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது

வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11 ஆம் கொலனி பகுதியில் இன்று(21) முற்பகல் சந்தேகத்திற்கிடமாக இளைஞன் நடமாடி திரிவதாக...

புராதன சிலையொன்றை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த குறித்த பொருளினையும் தாம் கைப்பற்றியுள்ளதாக கல்குடா...

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு . கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜீ . சுகுணன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார...

பிரதமர் மோடி – இலங்கை பிரதமர் ராஜபக்சே பங்கேற்கும் இரு தரப்பு மாநாடு காணொளி மூலம் நடத்த ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜாபக்சேவும் பங்கேற்கும் உச்சிமாநாடு வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தும் விதமாக...

ஐ.பி.எல்.கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் – சச்சின்

ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.பி.எல். கோப்பையை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here