சமீபகாலமாக எம் சமூகத்திலிருந்து கற்றவர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கான உயர்பதவி அங்கீகாரங்களும் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறதென சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
சந்திரபோஸ் என்பவர் பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற மகிழ்ச்சியான செய்தியோடு பூண்டுலோயாவைச் சேர்ந்த பெருமாள் கிஷாந்தன், கம்பளையைச் சேர்ந்த ஞானசேகரன் காயத்தி்ரி மற்றும் நாவலப்பிட்டியைச் சேர்ந்த நடராஐா அபிஷேக் ஆகியோர் உயர் நீதிமன்ற சட்டத்தரணிகளாக நியமனம் பெற்றிருப்பது எம் சமூகத்தையை இன்னுமொரு படி தலைநிமிர வைத்துள்ளது.
இந்த நியமனங்கள் அனைத்தும் எம் மாணவர்கள் மத்தியில் கல்வியில் ஆர்வத்தையும் சாதிக்க வேண்டுமென்ற உத்வேகத்தையும் கொடுக்கும் என நினைக்கின்றேன்.
எமது சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடித்தளமாக போதிய சட்ட ஆலோசனை கிடைக்காமல் இருப்பதனை அவதானிக்கிறேன். சாதாரண பிரச்சினைகளுக்கும் எளிதாக தீர்க்கப்படும் பிரச்சினைகளும் காலம் தாழ்த்தப்படுவதற்கும் தீர்க்கப்படாமல் தோல்வியில் முடிவதற்கும் சட்டத்தெளிவில்லாமல் இருப்பது பிரதான காரணியாக இருக்கிறது.
இது தொழிற்சங்க பிரச்சினைகளுக்கும் கூட பொருந்தும். சமீபத்தில் எமது சமூகத்திலிருந்து சட்டத்தரணியான மூன்று பெண்களும் இப்போது சட்டத்தரணியாகியுள்ள இம்மூவரும் தங்களது கடமைகளுக்கும் அப்பால் எமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கான சட்டத்தீர்வு பற்றிய விளக்கத்தையும் எம்மக்களுக்கு வழங்கவேண்டுமென விரும்பி வாழ்த்துகிறேன் எனவும் தெரிவித்தார்