Home Srilanka முக்கிய நாடுகளுக்கு விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்!

முக்கிய நாடுகளுக்கு விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்!

சர்வதேச ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு தொடர்ச்சியாக விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.

இதற்கமைய, இத்தாலியின் மிலான, இங்கிலாந்தின் லண்டன், ஜப்பானின் டோக்கியோ, மாலைத்தீவின் மலே, ஜெர்மனியின் பிரான்ங்பர்ட், பிரான்ஸின் பாரிஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களுக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இவ்வாறு குறித்த பகுதிகளுக்கு பயணிக்க விரும்புபவர்கள் காலி, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அலுவலகத்தின் ஊடாக டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 1979 எனும் துரித இலக்கம் அல்லது இணையத்தளம் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -