மேற்கு லோதியனில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்குண்ட மக்களை, அவசர குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, ப்ரோக்ஸ்பர்னில் வெள்ளம் ஏற்பட்டது.
இதனால், தங்களது வீடுகளில் சிக்கியிருந்த மக்களை, தீயணைப்பு வீரர்கள் படகுகளைப் பயன்படுத்தி வெளியேற்றினர்.
இந்த வெள்ளத்தினால், வீதிகள் நீரில் முடியதோடு, பல கார்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. கிளாஸ்கோவின் கிழக்கு முனையில் சில வீதிகளும் வெள்ள நீரில் மூடியது.
மத்திய பெல்ட்டில் மற்ற இடங்களில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மிக அதிக மழை வெள்ளம் காரணமாக நாடு முழுவதும் சேவைகள் தாமதமாகிவிடும் அல்லது இரத்து செய்யப்படும் என்று ஸ்காட்ரெயில் தெரிவித்துள்ளது.