- Advertisement -
Home Srilanka யாழில் குடும்பத் தலைவர் ஒருவர் தற்கொலை

யாழில் குடும்பத் தலைவர் ஒருவர் தற்கொலை

- Advertisement -

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரை மாய்த்தமைக்கு சமுர்த்தி அலுவலகத்தினதும்  சமுர்த்தி உத்தியோகத்தரதும் செயற்பாடுமே காரணம் என குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறிப்பாக, அலுவலகத்தில் வைத்து பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரை
அவமரியாதையாக திட்டியதாக குறிப்பிடப்படுகிறது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. கடந்த 20ஆம் திகதி சிவயோகன் என்கிற குடும்பஸ்தர் உயிரை மாய்த்தார். அவரது மனைவி ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் அவரது விபரீத முடிவையடுத்து பிள்ளைகள் அநாதரவாகியுள்ளனர்.

அவரது மரணத்திற்கு சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவமரியாதையாக திட்டியதே காரணமென உறவினர்கள் முறைப்பாடு கையளித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபரின் சமுர்த்தி கொடுப்பனவை, சமுர்த்தி அலுவலகம் சில மாதங்களாக
வெட்டியுள்ளது. அந்த கொடுப்பனவை மீள வழங்கும்படி அவர் சமுர்த்தி பண்டத்தரிப்பிலுள்ள அலுவலகத்திற்கு சென்று அடிக்கடி கோரிக்கை விடுத்து வந்துள்ளார். சமுர்த்தி கொடுப்பனவை நிறுத்தியதற்கான சரியான காரணங்கள் எதையும் தமக்கு சொல்லவில்லையென்றும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சம்பவ தினத்தில் சமுர்த்தி அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர், மிகுந்த
விரக்தியுடனும், அவமானத்துடனும் காணப்பட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவர் மது அருந்திவிட்டு வீடு திரும்பியதாகவும், பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தன்னை மரியாதைக் குறைவாக பலர் முன்னிலையில் பேசியதாக அவர் பிள்ளைகளிடமும் தெரிந்தவர்களிடமும் மனவிரக்தியுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

“எடுக்கிறது பிச்சைக்காசு“ என்ற வசனத்தை பலர் முன் சமுர்த்த பெண் உத்தியோகத்தர் பாவித்ததாக அவர் விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது நடவடிக்கையெடுக்குமாறு கோரி, உறவினர்களால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...

ஹர்த்தாலுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு!

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம்...

20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது எனவும் இதன் மூலம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here