Home Srilanka யாழில் வீட்டு வளவுக்குள் கிடந்த ஆபத்தான நிலக்கண்ணிவெடி

யாழில் வீட்டு வளவுக்குள் கிடந்த ஆபத்தான நிலக்கண்ணிவெடி

கவச வாகனங்களை தகர்க்க கூடிய நிலக்கண்ணி வெடி ஒன்று சாவகச்சோி – நுணாவில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

வீட்டு வளவு ஒன்றில் குழி தோண்டும்போது அங்கு சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதை அறிந்த வீட்டு உரிமையாளர் சாவகச்சோி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட நிலக்கண்ணி வெடியை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் குறித்த கண்ணிவெடி போர் காலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -