Home Srilanka ரிஷாட்டின் மனைவி பெயரில் சுமார் 1,000 கோடிக்கும் அதிகமான சொத்து? தேடி வந்தது அழைப்பு

ரிஷாட்டின் மனைவி பெயரில் சுமார் 1,000 கோடிக்கும் அதிகமான சொத்து? தேடி வந்தது அழைப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் பெயரிலுள்ள சொத்துக்கள் தொடர்பில் வருமான வரி திணைக்களத்துக்கு 17 கோடியே 99 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பில் தேசிய இறைவரித் திணைக்களம் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.

அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில்இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்ட தொகை இறைவரித் திணைக்களத்துக்கு செலுத்த வேண்டியுள்ள போதும் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவே திணைக்கம் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளது.

ரிஷாத் பதியுத்தீனின் மனைவியின் பெயரிலுள்ள சுமார் 1,000 கோடி ரூபாவுக்கு அதிகமான பெறுமதிகொண்ட சொத்துக்களுக்காக வருமானவரித் திணைக்களத்துக்கு இத் தொகையை செலுத்த வேண்டியிருந்த போதும் இது தொடர்பான விளக்கத்தை கோரும் வகையிலேயே அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரிஷாத் பதியுதீனின் மனைவிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பாணை ரிஷாத் பதியுதீனின் மனைவி வதியும் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -