- Advertisement -
Home Srilanka வங்கிகளில் வட்டிக்குப் பெறப்பட்ட பணத்தை விட பலமடங்கு வட்டியுடன் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டிய நிலை?...

வங்கிகளில் வட்டிக்குப் பெறப்பட்ட பணத்தை விட பலமடங்கு வட்டியுடன் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டிய நிலை? – மட்டக்களப்பில் நபொருவர் தூக்கில் தொங்கினார்

- Advertisement -

வங்கிகளில் வட்டிக்குப் பெறப்பட்ட பணத்தை விட பலமடங்கு வட்டியுடன் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட, தனது குடியிருந்த வீட்டையும், கடைத்தொகுதியையும் விற்று தனியார் வங்கியொன்றுக்கு பணத்தை செலுத்தியிருக்கிறார்.

75 லட்சம் ரூபா வங்கியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, 03 கோடியே 20 லெட்சம் ரூபா தனது சொத்துக்களை விற்று செலுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் மற்றுமொரு நிறுவனத்தில் வட்டிக்கு பெறப்பட்ட 75 லட்சத்துக்கும் மாதாந்தம் கட்டி வந்த தொகையைவிட இருமடங்கு கட்டிவரவேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தியதால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில் ஏற்கனவே விற்கப்பட்ட கடைத்தொகுதியின் பின்புறமாகவுள்ள ஸ்டோர் அறையின் வளையில் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி இன்று காலை (27/08) மரணித்துள்ளார்.

விற்கப்பட்ட கடையை, வாங்கிய முதலாளி ஓடாவி மேசன்மார்களை வைத்து திருத்த வேலைகளை செய்துவருவதால், இன்று காலை திருத்த வேலைகளுக்காக வந்த ஒடாவி ஒருத்தரே ஸ்டோர் அறைக்கு சென்றபோது, இவர் தூக்கிட்டிருப்பதை அடையாளம் கண்டு அவரது மனைவிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.

பின்னர் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, கௌரவ நீதிபதியின் உத்தரவுக்கமைய, பிரதேச மரண விசாரனை அதிகாரி MSM நஸீர், தடயவியல் பொலிசாரின் வருகையோடு சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தனது 59 வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு !

‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இரு வாரங்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here