Home International வடகொரியா எல்லை அருகே ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு யார் வந்தாலும் சுட்டு கொல்ல உத்தரவு!

வடகொரியா எல்லை அருகே ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு யார் வந்தாலும் சுட்டு கொல்ல உத்தரவு!

கொரோனாவை தடுக்க சீன- வடகொரியா எல்லை அருகே ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு யார் வந்தாலும் சுட்டுக் கொல்ல எல்லை படையினருக்கு வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவவில்லை என நீண்ட காலமாகவே வடகொரியா கூறிவந்தாலும், கடந்த மாதம் கொரோனா பரவியதை ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் Hoeryong நகரில் அவரச எச்சரிக்கையை விடுத்த கிம்ஜாங் உன், வடகொரியா- சீனா எல்லைக்கு அருகே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் யார் வந்தாலும் சுட்டுக் கொல்ல எல்லைப்படையிருக்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரிகள் திட்டமிட்டே கொரோனா வைரஸை பரப்பலாம் என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம்.

எல்லையில் இருப்பவர்களுக்கு எதிரிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடனடியாக ஆட்கள் நடமாட்டத்தை பற்றி அதிகாரிகளுக்கு எச்சரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு சீனாவை ஒட்டியுள்ள நான்கு மாகாணங்களின் 880 மைல்களுக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -