- Advertisement -
Home Srilanka 1000 ரூபாய் வழங்கப்படுமா? இல்லையா ? சபையில் அநுரகுமார கேள்வி!

1000 ரூபாய் வழங்கப்படுமா? இல்லையா ? சபையில் அநுரகுமார கேள்வி!

- Advertisement -

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு குறித்த யோசனை பிரதமரால் நேற்று சமர்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையில் ஏன் உள்ளடக்கபடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
அரசாங்க செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உறுதியளிக்கப்பட்டவாறு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஆயிரம் ரூபா வேதனம் வழக்கப்படுமா என கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி நிதியமைச்சரிடம் கேள்வி ஒன்றை தொடுத்திருந்தேன்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அந்த ஆயிரம் ரூபா வழங்கப்படுமென நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

அது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக என மீண்டும் கேள்வி எழுப்பினேன்.

அதற்கு பதிலளித்த அப்போதை பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது என குறிப்பிட்டார்.

பதிலளிப்பதற்கு இடம்வழங்காது எழுந்து நின்ற நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ தானே இந்த விடயத்தை கூறுவதாகவும் நிச்சயமாக மார்ச் மாதம் இந்த கொடுப்பணவு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த இடைக்கால கணக்கறிக்கையில் எங்கே அந்த கொடுப்பணவு உள்ளடக்கப்பட்டுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here