- Advertisement -
Home Srilanka 2023 இல் பால் உற்பத்தியில் தன்னிறைவு நாடாக இலங்கை விளங்கும் - அமைச்சர் மஹிந்தானந்த

2023 இல் பால் உற்பத்தியில் தன்னிறைவு நாடாக இலங்கை விளங்கும் – அமைச்சர் மஹிந்தானந்த

- Advertisement -

இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் பால் உற்பத்தியில் ஒரு தன்னிறைவு நாடாக விளங்கும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ‘சொபாக்கிய தூரநோக்கு’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையை ஒரு தன்னிறைவு நாடாக மாறச்செய்யும் பொருட்டு 2023 ஆம் ஆண்டளவில் நாட்டின் பாலுக்கான தேவையை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நோக்கில் தோட்டக் கம்பனிகளுக்கும் மற்றும் உள்நாட்டு முதலீட்டுத் தரப்புகளுக்கும் இடையில் ஒரு விஷேட பேச்சுவார்த்தை நேற்றுமுன்தினம் (இன்று) கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கதலைமையில் நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்,

‘நாட்டில் 22 தோட்டக் கம்பனிகள் உள்ளன. ஒரு தோட்டக் கம்பனிக்கு ஆயிரம் பால் மாடுகளை வாங்குமாறு நாம் கூறினோம். அதே போன்று, அதற்கு தேவையான உட்கட்டமைப்பை வசதிகளை அரசாங்கம் வழங்கும். அதற்கு இணங்க, தொழில்நுட்ப அறிவு, நிவாரணம், நிதி உதவி, கால்நடைகளின் உணவு உற்பத்திக்கான நிலம் என்பனவும் மற்றும் ஏனைய வசதிகள் அனைத்தும் வழங்கப்படும்.

தற்பொழுது வருடாந்தம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் உற்பத்தியை இதன் மூலம் 422 மில்லியன் லீற்றர்களிலிருந்து 750 மில்லியன் லீற்றர்களாக அதிகரிக்க முடியும்.

அதே போல் இந்த திட்டத்திற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் உதவியைப் பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலமாக நாம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை பாதுகாப்போம். அவர்கள் செய்ய வேண்டியது அந்த 22 தோட்டக் கம்பனிகளுக்கு கால்நடைகளை வாங்குவது மட்டுமே. கூறப்பட்ட அந்த வசதிகள் அனைத்தையும் நாங்கள் வழங்குவோம்.

அதன்படி, 22,000 பால் மாடுகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் வழங்கும். அந்த விதத்தில்தான் விவசாயத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பை அதிகரிக்க நாம்எதிர்பார்க்கின்றோம்.

ஏனென்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு இதற்கு முன் 37% வீதமாக காணப்பட்டது. ஆனால் கடந்த காலத்தில் இது 7%வீதமாக குறைந்துள்ளது. விவசாயத்தின் முக்கிய அங்கமான பால் உற்பத்தி மிகவும் முக்கியமானதாகும். எனவே, பால் உற்பத்தியாளர்களை பாதுகாத்து, இந்த புதிய வேலைத் திட்டங்கள் ஜனாதிபதியின் அறிவுறுத்தல் பிரகாரம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

அமைச்சர் கனக ஹேரத், ஜனக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தினதும் மற்றும் தனியார் துறையினதும் தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கலாக பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

srilanka
srilanka

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

அதாவுல்லாவின் உடையால் சபையில் வெடித்தது சர்ச்சை

பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அணிந்திருந்த உடைக்கு எதிர்ப்புத் தொரிவித்து பாராளுமன்றில் இன்று ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. பாராளுமன்ற நிலையியல் கட்டளை சட்டங்களை மீறி அதாவுல்ல உடையணிந்திருருந்ததாக சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அவரை சபையிலிருந்து...

முகப்புத்தக களியாட்டத்தில் போதைப்பொருட்களுடன் சிக்கிய 16 பேர் கைது

மாதுருஓயா பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகப்புத்தக களியாட்ட விருந்திற்கு சென்ற 16 இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பொலன்னறுவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஒருவகை போதைப்பொருள் 33, 17 கிராம்,...

பிரபல நடிகர் மரணம்; அதிர்ச்சியில் சினித்துறையினர்!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் வலம்வந்த ரூபன், தனது 54 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். அவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் விஜய்யின் கில்லி, தில், தூள் உள்பட பல படங்களில்...

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் – இரா.சாணக்கியன்!

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்குஇ அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சிறுத்தை சடலமாக மீட்பு

மஸ்கெலியா, பிரவுன்லோ தோயிலைத் தோட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஆறு வயதுடைய புலியின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்பட்டதாக நல்லதன்னி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here