- Advertisement -
Home Sports 700 விக்கெட் வீழ்த்த முடியும் நம்பிக்கையில் அண்டர்சன்

700 விக்கெட் வீழ்த்த முடியும் நம்பிக்கையில் அண்டர்சன்

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னால் 700 விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் செளத்ஹாம்டனில் நடைபெற்ற இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. மழை குறுக்கிட்டதனால் இங்கிலாந்துக்கு வெற்றி பெற முடியாது போனது. எனினும் தொடரை 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்த டெஸ்டின் இறுதி நாளில் பாகிஸ்தான் அணித்தலைவரான அஸார் அலியின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் வீழ்த்தினார். இது அண்டர்சனின் 600 ஆவது (156 டெஸ்ட்) விக்கெட்டாகும். இதன் மூலம் இலங்கையின் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்), அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் (708 விக்கெட்), இந்தியாவின் அனில் கும்பிளே (619 விக்கெட்) ஆகியோருக்கு பிறகு 600 விக்கெட் மைல்கல்லை எட்டிய 4 ஆவது பந்துவீச்சாளராகவும், வேகப்பந்து வீச்சாளர்களில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற சிறப்பை அண்டர்சன் பெற்றார்.

அவருக்கு பல வீரர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘600 விக்கெட் என்ற அற்புதமான சாதனை படைத்த அண்டர்சனுக்கு வாழ்த்துகள். நான் எதிர்கொண்ட சிறந்த பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர்’ என்றார். ‘600 விக்கெட்டுக்கள் பட்டியலில் உங்களை வரவேற்கிறேன். ஒரு வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து வெளிப்பட்ட மிகப்பெரிய முயற்சி இது’ என்று இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே பாராட்டியுள்ளார்.

சச்சின் , மெக்ராத் பாராட்டு

அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் எப்படி துடுப்பாட்டத்தில் உச்சத்தை தொட்டாரோ அதே போல்தான் வேகப்பந்து வீச்சில் அண்டர்சன். டெஸ்டில் சச்சின் குவித்துள்ள ஓட்டங்களையோ (15,921 ), அவர் பங்கேற்ற போட்டிங்களின் எண்ணிக்கையையோ (200 டெஸ்ட்) யாராலும் எட்டிப்பிடிக்க முடியாது. இதே போல் வேகப்பந்து வீச்சில் அண்டர்சன் உயரிய தரத்தை நிர்ணயித்து இருக்கிறார். அண்டர்சனுக்கு நிகரான திறமை என்னிடம் கிடையாது. இரு புறமும் பந்தை கட்டுக்கோப்புடன் ஸ்விங் செய்வதில் அவரை மிஞ்ச முடியாது’ என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்தவர், அண்டர்சன். சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘வியப்புக்குரிய சாதனை இது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்றால் அது அவரது மனஉறுதி, விடா முயற்சி, துல்லியமான பந்து வீச்சுக்கு சான்று’ என்றார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘இந்த மைல்கல் தனித்துவமானது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை நினைத்து பார்க்க முடியாதது. உங்கள் சாதனை, ஒவ்வொரு இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கும்’ என்றார்.

தொடர்ந்து விளையாடுவேன்

சாதனைக்கு பிறகு பேட்டி அளித்த 38 வயதான அண்டர்சன் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டிடம் சிறிது நேரம் விவாதித்தேன். அவுஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டியின் போது (2021-22ஆம் ஆண்டு ஆஷஸ் தொடர்) நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதில் என்னால் ஏன் விளையாட முடியாது? உடற்தகுதியை சீரியமுறையில் பராமரிக்கவும், ஆட்டத்திறனை மேம்படுத்தவும் கடினமாக உழைக்கிறேன். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு அணித்தேர்வுக்கு தயாராக இருப்பேன்.

இங்கிலாந்து அணிக்கு இன்னும் என்னால் நிறைய பங்களிப்பு அளிக்க முடியும் என்று நம்புகிறேன். இங்கிலாந்து அணிக்காக எனது கடைசி டெஸ்ட் போட்டி வெற்றியை பெற்று விட்டதாக நினைக்கவில்லை. என்னால் 700 விக்கெட் இலக்கை எட்ட முடியுமா? என்றால் ஏன் முடியாது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நாங்கள் நீடிக்கிறோம். எங்களுக்கு நிறைய டெஸ்ட் போட்டிகள் வர உள்ளன. அதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதுவே எனது ஆர்வமாக இருக்கிறது. இப்போதும் ஒவ்வொரு நாளும் பயிற்சியில் ஈடுபடுவதை விரும்புகிறேன்’ என்றார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

இலங்கையின் புதிய சரக்கு விமான நிறுவனம்!

இலங்கையின் புதிய வணிக சர்வதேச விமான நிறுவனமான ஸ்பார்க் ஏயார் நிறுவனம் எதிர்வரும் 2021 பெப்ரவரி முதல் இயங்க ஆரம்பிக்கவுள்ளது. மத்தள விமான நிலையத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயற்படவுள்ளது. ‘ஸ்பார்க் எயார்’...

ஒருவர் 5 சிம் கார்ட்டுக்கும் அதிகமான இனிமேல் வைத்திருக்க முடியாது!

ஒரு நபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நபர் தனது பெயரில் மொத்தம் ஐந்து சிம் கார்டுகளை வைத்திருக்க...

பிரதமர் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி…!!

இலங்கையின் சகல தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர் மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே...

கொரோனாவினால் பலியானோர் 10 இலட்சம் பாதிப்புக்குள்ளானோர் தொகை மூன்று கோடி !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 10 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல்...

தேசிய போக்குவரத்து மருத்துவ நிலைய அலுவலகங்களை அதிகாலை வேளையில் திறக்க தீர்மானம்

நாட்டில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை 5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை பெறுநர்கள் அதிகாலை 5.30 மணி முதல் மருத்துவ பரிசோதனைக்கான சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here