சங்கரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இலங்கையில் உருவாகவிருக்கும் வேலி திரைப்படத்தின் பூஜை நேற்று களனி சரசவி கலைக்கூடத்தில் நடைபெற்றது .
இலங்கையின் முதல் வர்ண திரைப்படமான ஷர்மிளாவின் இதய ராகம் படத்தை இயக்கிய பேராதனை ஜுனைதீன் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
இலங்கையின் பல்வறு பகுதிகளில் வேலி திரைப்படதிற்கான படப்பிடிப்புகள் பத்து நாட்களில் நடத்தி முடிக்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.
திரைப்படத்தில் மேடை, வானொலி, தொலைகாட்சி நாடங்கள் மற்றும் சிங்கள திரைப்படங்களில் நடித்து மக்கள் மனம் கவர்ந்த மூத்த நடிகர் நடிகைகளும் இளம் கலைஞர்களும் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.