- Advertisement -
Home Srilanka இலங்கையில் ஒரே பிரவசத்தில் பிறந்த 5 குழந்தைகள்! தந்தை வெளியிட்ட தகவல்

இலங்கையில் ஒரே பிரவசத்தில் பிறந்த 5 குழந்தைகள்! தந்தை வெளியிட்ட தகவல்

- Advertisement -

இலங்கையில் நீண்ட காலத்தின் பின்னர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்தது.
கொழும்பு டி சொய்ஸா பெண்கள் வைத்தியசாலையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் இந்த 5 குழந்தைகள் பிறந்துள்ளது.

கம்பஹா – பெபிலியாவல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ரசாஞ்சலி ஜயவர்தன என்ற பெண்ணே இந்த குழந்தைகளை பெற்ற தாயாகும்.

இது அவரது முதலாவது குழந்தை பிரசவம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆசிரியரான அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று காலை 10 – 11 மணியளவில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 நிமிட காலப்பகுதியில் 5 குழந்தைகளும் பிறந்துள்ளது.

குறித்த குழந்தைகள் ஐவரும் சொய்ஸா டி பெண்கள் வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளின் தந்தை கருத்து வெளியிடும் போது, “இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. எனது தேவைகளுக்காக பெற்ற குழந்தைகள். நான் யாரிடமும் உதவி கேட்க முடியாது. யாராவது விரும்பினால் உதவி செய்யட்டும்.

அதனை ஏற்றுக் கொள்வேன். இதுவரையிலும் குழந்தைகள் தொடர்பில் ஒன்றும் யோசிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதல் முறையாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் சேவை செய்த அதிகாரிக்கு ஒரே பிரவசத்தில் 5 குழந்தைகள் பிறந்த நிலையில், 2012ஆம் 2 தாய்மார்களுக்கு 5 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது.
நேற்று பிறந்த குழந்தைகள் இலங்கையில் பதிவாகிய நான்காவது சம்பவமாகும்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here