நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய முதல் உரையின் உலகின் மூத்த மொழி தமிழ் என்றும் முதல் குடிமக்கள் தமிழ் மக்களே என்றும் பேசியமைக்கு இன ரீதியாக எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்றை வீணாகக் குழப்ப வேண்டாம் என முன்னாள் நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து உண்மைகளை கண்டறிய நீங்கள் தயாரா எனவும் அவர் பகிரங்கமாக கேள்வி ஒன்றினை முன்வைத்துள்ளார்.