- Advertisement -
Home International “டிரம்ப் திறமை அற்றவர்” என்கின்றார் கமலா ஹாரிஸ்!

“டிரம்ப் திறமை அற்றவர்” என்கின்றார் கமலா ஹாரிஸ்!

- Advertisement -

அமெரிக்காவில் தீர்மானமிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி நடைபெற உள்ள நிலையில், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சி யின் துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்கியுள்ள இந்திய பூர்விகம் கொண்ட கமலா ஹாரிஸ், கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கண்டு டிரம்ப் அஞ்சுவதாகவும் மேலும் அவர் சீன விவகாரத்தை சரியாக கையாளும் திறமை அற்றவர் எனவும் கூறியுள்ளார்.’

இது குறித்து கமலா ஹாரிஸ், கூறியுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை அச்சுறுத்திவரும் நிலையில் டிரம்ப் அரசு வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளை சரியாக கவனிக்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கண்டு டிரம்ப் அஞ்சுகின்றார். மேலும் சீன விவகாரத்தை சரியாக கையாளும் திறமை அற்றவர் டிரம்ப்.

கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் கொடியது. இது குறித்து அடிக்கடி டுவிட்டரில் பதிவிடுவதன் மூலமாக மட்டுமே சரிப்படுத்த முடியாது. கொரோனா வைரஸ் குறித்து டுவீட் இடுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளார் டிரம்ப்’ என கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் அமெரிக்காவை விட்டுப் போகும் என நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது. அவ்வாறு செய்தால் மட்டுமே கொரோனா வைரஸ் நம்மை விட்டுப் போகாது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனப் பேசிய ஹாரிஸ், அரசு நிர்வாகத்தை நடத்துவது எப்படி எனத் தெரியாதவர் டிரம்ப். அரசியல் என்பது தான் மட்டுமே சம்பந்தப்பட்ட ஓர் துறை என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று சாடியுள்ளார் கமலா.

தேர்தல் நெருங்கி வருவதால் டிரம்ப், ஜோ பிடேன், கமலா ஹாரிஸ் ஆகியோர் எதிர்கட்சிகள்மீது தீவிர விமர்சனத்தை முன்வைத்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதேவேளை ஜனநாயகக் கட்சி சார்பாக துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸூக்கு அமெரிக்க மக்கள் தங்கள் ஒருமித்த ஆதரவை வழங்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here