- Advertisement -
Home International பெலராஸ் ஜனாதிபதியை கருப்பு பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளது; ஐரோப்பிய ஒன்றியம்!

பெலராஸ் ஜனாதிபதியை கருப்பு பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளது; ஐரோப்பிய ஒன்றியம்!

- Advertisement -

தேர்தல் மோசடி மற்றும் எதிர்ப்பாளர்கள் மீதான வன்முறை என சந்தேகிக்கப்படும் 20 மூத்த பெலாரஸ் அதிகாரிகளுக்கு, பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவை ஒரு கட்டத்தில் தனது பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

பெர்லினில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த செக் குடியரசு வெளியுறவு அமைச்சர் டோமாஸ் பெட்ரிசெக் இதனை உறுதி செய்தார்.

இதன்போது அவர் கூறுகையில், ‘இந்த பட்டியல் எவ்வாறு கட்டமைக்கப்படும், யார் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பார்கள் என்பதில் எங்களுக்கு பொதுவான உடன்பாடு உள்ளது.

இருப்பினும், பட்டியலை சட்டப்பூர்வமாக இறுதி செய்வதில் உள்ள தொழில்நுட்பங்கள் காரணமாக, குறைந்தது ஒரு வாரத்திற்கு முடிவுக்கு வராது’ என கூறினார்.

பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகியவற்றால் பெலாரஷ்யின் ஜனாதிபதி பாதிக்கப்படுவாரா என்று கேட்கப்பட்டதற்கு, பெட்ரிசெக், ‘லுகாஷென்கோ பட்டியலில் இருக்க வேண்டும்’ என்று தான் நம்புவதாகக் கூறினார். மேலும், ‘முதல் கட்டத்தில், அல்லது முன்னேற்றம் இல்லாவிட்டால் பின்னர் ஒரு கட்டத்தில் அவர் சேர்க்கப்படுவார்’ என்று அவர் கூறினார்.

சில நாடுகள் படிப்படியாக அணுகுமுறையை விரும்புகின்றன, இது லுகாஷென்கோ எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தவறினால் படிப்படியாக அதிக பெயர்களைச் சேர்ப்பதன் மூலம் அழுத்தத்தைத் தூண்டும்.

இதேவேளை, லுகாஷென்கோ இப்போது பட்டியலில் இருக்க வேண்டும் என்று லிதுவேனியன் வெளியுறவு அமைச்சர் லினாஸ் லிங்கெவிசியஸ் தெரிவித்தார். லிதுவேனியா தனது சொந்த 118 அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்தது.

பெலாரஸ் ஜனாதிபதி தேர்தலில் வாக்கெடுப்பு மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு முதல் நான்கு நாட்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட 7,000 பேரை தடுத்து வைத்தனர்.

ரப்பர் தோட்டாக்கள், ஸ்டன் கையெறி குண்டுகளால் நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்தினர். குறைந்தது மூன்று எதிர்ப்பாளர்கள் இறந்தனர். வியாழக்கிழமை பேரணிகளில் சுமார் 180பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...

ஹர்த்தாலுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு!

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம்...

20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது எனவும் இதன் மூலம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here