Home Spiritual மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 66ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 66ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

Uthayakanth
மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 66ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 66ஆவது வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை (28ம் திகதி) பிற்பகல் 5.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் மாதாவின் திருச் செரூப பவனி கரடியனாறு சந்தியிலிருந்து ஆரம்பமாகி ஆயித்தியமலை சதா சகாய மாதா ஆலயத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து ஆலய பங்குத் தந்தை அன்டனி டிலிமா மற்றும் பங்கு மக்கள் அரச திணைக்கள பிரதிநிதிகளால் பிற்பகல் 5.45 மணிக்கு கொடி ஏற்பப்பட்டு தொடர்ந்து அன்னையின் திருவிழா பூசைகள் நடைபெற்றது.

மட்டக்களப்பு புல்லுமலை பிரதேச இறை மக்கள் மற்றும் இளையதம்பி குடும்பத்தினர் ஆகியோரால் நடாத்தப்பட்ட 1ம் நாள் திருவிழாவில் அருட்தந்தை டெரன்ஸ் ராகல் அவர்களால் பூசைகள் நடாத்தப்பட்டு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத் திருவிழாவின்போது, புல்லுமலை பங்கு மக்கள் மற்றும் ஆயித்தியமலை,கரடியனாறு, மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

இங்கு வருகைதந்த மக்களுக்கு ஆயித்தியமலை பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர்.

மேலும் இத் திருவிழாக் காலங்களில் ஆலயத்திற்கு வரும் மக்கள் கொரோனா பாதுகாப்பினை கடைப்பிடிக்குமாறும், ஆலய வளாகத்தில் சிற்றுண்டி, உணவுக் சாலைகள் எதுவும் அமைக்க அனுதிக்கப்படமாட்டாது எனவும், தேவையான உணவுப் பொருட்களை அவர்களே கொண்வந்து அருந்துவது பொருத்தமாக இருக்கும் எனவும் ஆலய நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு கூட்டுத் திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜேசப் ஆண்டகை அவர்கள் தலைமையில் இடம்பெற்று கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.m6

n2 scaled
Church

Karadiyanaru- Church
Ayithiyamalai- Church

Karadiyanaru

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -