Uthayakanth
அரசாங்கத்தினால் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் செயற்திட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் நியமனம் வழங்கும் பொருட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுனர் பயிற்சி வழங்குவதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று 28.08.2020 ஆந் திகதி நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
பிரதேச செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நியமனக் கடிதத்தினை பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்கள் வழங்கி வைப்பதையும், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.திவாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.