- Advertisement -
Home Srilanka மோசடிகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள திட்டம்

மோசடிகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள திட்டம்

- Advertisement -

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில், அரசாங்கத்தின் நான்கு பிரதான வங்கிகளிலும், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களிலும் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வங்கிகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் அடங்கிய குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த வங்கிகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்கள் அறிந்திருப்பார்களாயின், அது தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தகவல்களை வழங்க வேண்டும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பணிப்பாளர், பொது நிறுவனத்துறை திணைக்களம், நிதி அமைச்சு செயலக காரியாலயம், கொழும்பு 1 என்ற முகவரிக்கு அந்த தகவல்களை அனுப்பி வைக்க முடியும் என அறிக்கை ஒன்றின் ஊடாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தனது 59 வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு !

‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இரு வாரங்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here