‘இட்டுகம’ எனப்படும் கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு 162 கோடி 13 இலட்சத்து 4 ஆயிரத்து 424 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட மற்றும் நிறுவன ரீதியான அன்பளிப்புகளுடன் நிதியத்தின் வங்கி கணக்கில் இடப்பட்ட நேரடி வைப்புகளுடன் இந்த தொகை எட்டப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் 3 கோடி 19 இலட்சத்து 6 ஆயிரத்து 301 ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதற்கான காசோலை, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று வழங்கிவைக்கப்பட்டது.