Home Srilanka மட்டக்களப்பிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான ஆவணி 30ஆம் திகதியான இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், மட்டக்களப்பு கல்லடியில் ஆரம்பமாகும் போராட்டமானது காந்திபூங்கா வரை சென்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் கையளித்தவுடன் நிறைவு பெறவுள்ளது.

இதேவேளை இன்றையதினம் யாழில் இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மதகுருமார்கள், அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூகமட்ட பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் கலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுதர அணிதிரண்டுள்ளதாக தெரியவருகிறது.

1 3 2 3 4 5 6

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -