- Advertisement -
Home Srilanka சீன பெட்டிகளுடனான இயக்க தொடருந்துகளின் சேவைகளில் இருந்து விலகிய தொடருந்து சாரதிகள் தொழிற்சங்கம்

சீன பெட்டிகளுடனான இயக்க தொடருந்துகளின் சேவைகளில் இருந்து விலகிய தொடருந்து சாரதிகள் தொழிற்சங்கம்

- Advertisement -

தொடருந்து இயந்திரங்களின் (பிரேக்) தடையாளிகளில் தவறு இருப்பதாக கூறி தொடருந்துகளின் சாரதிகள் தொழிற்சங்கம் (லொகோமோட்டிவ் என்ஜின் ஒப்பரேட்டர்கள் யூனியன்) நேற்று நள்ளிரவு முதல் சீன பெட்டிகளைக் கொண்ட இயக்க தொடருந்துகளின் சேவைகளில் இருந்து விலகியுள்ளது.

ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இந்த விடயம் உயர்மட்டம் வரை எடுத்து செல்லப்பட்டதாக தொடருந்துகளின் சாரதிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

இலங்கையில் சீனத் தயாரிப்பில் உருவான சுமார் 100 பெட்டிகள் தொடருந்து சேவையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற பெட்டிகளைப் பயன்படுத்தும்போது விபத்து ஏற்பட்டால் எந்தவொரு குற்றச்சாட்டையும் சாரதிகள் மீது சுமத்தப்போவதில்லை என்று தொடருந்து திணைக்களத்தின் மேலாளர் உறுதியளித்திருந்தார்.

எனினும் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இதுபோன்ற பெட்டிகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் விபத்துக்களுக்காக சாரதிகளின் மீதே குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளதாக இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

இதேவேளை சீன தொடருந்து பெட்டிகளின் தடையாளி தொகுதி (பிரேக் சிஸ்டம்) காரணமாக சுமார் 200 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தொடங்கொட கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த தடையாளி பிரச்சினைக்கு தீர்வை தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தபோதும் இன்னும் தீர்வு தரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

யாழ் தேசிய கல்வியியல் கல்லூரி தமிழ் மன்றத்தின் கௌரவிப்பு நிகழ்வு.

(யாழ் லக்சன்) யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் மனோன்மனி சண்முகதாஸ் அவர்களுக்கான விசேட கௌரவிப்பு நிகழ்வானது நேற்றையதினம்(21.09.2020)மாலை 04.30...

சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – மத்திய மாகாண ஆளுனர்

கண்டி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் துரிதமாக ஆராய்வதோடு, அவற்றில் அபாயமுடைய கட்டடங்கள் காணப்படுமாயின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை...

அதாவுல்லாவின் உடையால் சபையில் வெடித்தது சர்ச்சை

பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அணிந்திருந்த உடைக்கு எதிர்ப்புத் தொரிவித்து பாராளுமன்றில் இன்று ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. பாராளுமன்ற நிலையியல் கட்டளை சட்டங்களை மீறி அதாவுல்ல உடையணிந்திருருந்ததாக சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அவரை சபையிலிருந்து...

முகப்புத்தக களியாட்டத்தில் போதைப்பொருட்களுடன் சிக்கிய 16 பேர் கைது

மாதுருஓயா பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகப்புத்தக களியாட்ட விருந்திற்கு சென்ற 16 இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பொலன்னறுவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஒருவகை போதைப்பொருள் 33, 17 கிராம்,...

பிரபல நடிகர் மரணம்; அதிர்ச்சியில் சினித்துறையினர்!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் வலம்வந்த ரூபன், தனது 54 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். அவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் விஜய்யின் கில்லி, தில், தூள் உள்பட பல படங்களில்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here