- Advertisement -
Home Uncategorized திருக்கோவில் உமிரியில் மீண்டும் இல்மனைற் அகழ முயற்சி? - தீக்குளிப்போம் என மக்கள் எதிர்ப்பு

திருக்கோவில் உமிரியில் மீண்டும் இல்மனைற் அகழ முயற்சி? – தீக்குளிப்போம் என மக்கள் எதிர்ப்பு

- Advertisement -

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கான களவிஜயத்தை மேற்கொண்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பாரிய எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதனால் அப்பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை திருக்கோவில் உமிரிப் பகுதியில் இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் மற்றும் கரையோரம் பேணல் – கரையோர மூலவளமுகாமை திணைக்களம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம், மீன்பிடித்திணைக்களம், கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்புத்திணைக்களம், வனபரிபாலன திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை, சுரங்கங்கள் பணியகம் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்களின் உயரதிகாரிகள் நேற்று காலை 9மணியளவில் உமிரிப்பகுதிக்கு வந்திறங்கினர்.

இல்மனைற் அகழ்வுக்கு பொறுப்பான தம்சிலா எக்ஸ்போர்ட் கம்பனி நிர்வாகிகளும் சமூகமளித்திருந்தனர். கடற்படையினரும் வருகதைந்திருந்தனர்.

அங்கு இல்மனைற் அகழ்வதற்கான சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்காக இக்குழுவினர் வந்திருப்பதாக தகவல்கள் காட்டுத்தீபோல் பரவியது.

ஒருசில நிமிடங்களில் திருக்கோவில் பிரதேசபைத் தவிசாளர் எ.டபிள்யு.கமலராஜன் அங்கு வந்துசேர்ந்தார். பொதுமக்களும் குவியத்தொடங்கினர்.

தவிசாளர் கமலராஜன் வந்து தனது எதிர்ப்பை தெரிவித்து அதிகாரிகளிடம் இவ்வாறு கூறினார்,

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு எமது பிரதேசத்திற்கு அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுவந்து எமக்குத்தெரியாமல் இல்மனைற் அகழ்வுப்பணிக்கான ஆரம்பவேலையை மேற்கொள்ளத்தலைப்பட்டனர்.

அப்போது பொது மக்கள் கிளர்ந்தெழுந்து எதிர்ப்புத்தெரிவித்தனர்.

அதுமட்டுமல்ல மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்து பாரிய எதிர்ப்பு மழைக்கு மத்தியில் ஊர்வலத்தை நடாத்தி பிரதேசசெயலரிடம் மகஜரும் கையளித்தோம். அத்துடன் அத்திட்டம் விடப்பட்டது.

திருக்கோவில் பிராந்தியத்தில் இன்மனைற் அகழ்வதற்கு மக்கள் எதிர்ப்புத்தெரிவிக்கின்றனர்.எமது சபையிலும் எதிர்ப்புத்தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம்.

கடந்த வருடம் கொழும்பில் கரையோரம் பேணல் – கரையோர மூலவளமுகாமை திணைக்கள ஏற்பாட்டில்கூட்டமொன்று நடைபெற்றது. அதற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

அங்கு மீண்டும் இல்மனைற் அகழ்வது தொடர்பில் பேசப்பட்டது. அந்த இடத்தில் நான் எமது மக்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்து அதனை முழுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தேன். அத்தோடு அது முடிந்தது.

இந்நிலையில் எனக்கு தெரியாமல், மக்களுக்கு அறிவிக்காமல் இங்கு இன்று மீண்டும் வந்து செய்கின்ற வேலைக்கு நான் பூரண எதிர்ப்பை தெரிவிக்கிறேன்.

எந்தக்காரணம் கொண்டும் திருக்கோவில் பிரதேச கனியவளத்தை சூறையாட அனுமதிக்கமாட்டேன் என்றும் கூறினார். சபைத்தீர்மான பிரதியை மேலதிக அரசஅதிபர் தொடக்கம் உயரதிகாரிகளிடம் அவர் கையளித்தார்.

அதனிடையே அங்கு வந்த பொதுமக்கள் சிங்களத்திலும், தமிழிலும் மாறிமாறி உரக்கக்குரல்கொடுத்தனர். அவர்கள் கூறியதாவது,

எமது கடலோர வளங்களை இழக்க நாம் தயாரில்லை. இல்மனைற் அகழ்ந்தால் எமது நிலத்தடிநீர் உவர்நீராகும். இங்குள்ள தென்னை மரங்கள் தொடக்கம் சகல பயிர்பச்சைகளும் கருகும். புல்மோட்டை நல்ல உதாரணம்.

மற்றது கடலரிப்பு நடக்கும். ஏற்கனவே ஒலுவில் துறைமுகம் கட்டியதனால் இப்பிராந்தியம் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. எமது திருக்கோவில் முருகன் ஆலயமும் பாதிக்கப்பட்டது.

எனவே இன்னமும் நாம் பாதிக்கப்பட விரும்பவில்லை. இங்கு இல்மனைற் அகழவேண்டாம். அதைமீறிச் செய்யமுற்பட்டால் நாம் தீக்குளிப்போம் என உரக்ககத்தினர்.

மேலதிக அரசஅதிபர் வே.ஜெகதீசன் நிலைமையை சமாளித்து அங்கு கூறுகையில்,

மக்களது சம்மதம் இல்லாமல் இங்கு எதுவும் நடக்காது. இது ஒரு களவிஜயம் மட்டுமே. இதற்கான அறிக்கைகளை நாம் தனித்தனியாக அனுப்பவேண்டும்.

அதன்பிறகுதான் முடிவெடுக்கப்படும். உங்களது எதிர்ப்பை கட்டாயம் நாம் தெரிவிப்போம். உங்களை மீறி எதுவும் நடக்காது. உங்களுக்கு சேவை செய்யவே நாம் இருக்கிறோம்.

எனவே மக்களுக்கு பாதகமாக எதுவும் நடக்காது.எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் மக்களுடனான பகிரங்ககூட்டம் நடாத்தப்படும் என்றார்.

திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரனும் அதேபாணியில் விளக்கமளித்தார். அத்துடன் பிரச்சினை தீர்ந்தது. மக்கள் கலைந்தனர்.

இந்த இல்மனைற் அகழும் திட்டத்தின் கீழ் அம்பாறை கரையோரத்தில் 46 கி.மீற்றர் தூரம் ஒலுவில் தொடக்கம் உமிரி வரை இன்மனைற் அகழப்படவுள்ளது.

அதன்முதற்கட்டமாக உமிரியில் 0.6 கி.மீற்றர் தூரம் அகழ்வதற்கான களவிஜயமே இதுவெனத் தெரியவருகிறது.

Thirukkovil 1

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here