- Advertisement -
Home Srilanka இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

- Advertisement -

நாரம்மல மற்றும் கண்டி பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாரம்மல

நாரம்மல – குளியாப்பிட்டிய வீதி, பேரகஸ்வெல்ல பகுதியில் புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாரம்மல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று எதிர்த்திசையில் வந்த அரச பஸ்ஸொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சென்ற நபரும் பெண்னொருவரும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

போகஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 62 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கண்டி

கண்டி, ஹந்தான தபோதாராம மாவத்தையில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹிருஸ்ஸகல நோக்கி சென்ற பெக்கோ இயந்திரமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்றுள்ளது. இதன்போது பெக்கோ இயந்திரம் வீதியை விட்டு விலகி 15 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாபான – குன்னேபான பகுதியைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் அதில் வந்த இன்னொரு நபரும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...

வெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...

சடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி

நானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...

சஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...

20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here