- Advertisement -
Home Srilanka "புதன்கிழமை முக்கியம்" - ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை!

“புதன்கிழமை முக்கியம்” – ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை!

- Advertisement -

நாட்டுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்காக அமைச்சர்கள் உள்ளடங்கலாக அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் தத்தமது அலுவலகங்களிலேயே இருக்கவேண்டும் என்றும் அன்றைய தினம் வேறு வேலைகளுக்காகச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருக்கிறார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கான நேரம் போதுமானதாக இல்லை என்றும் அமைச்சரவை உபகுழுவின் பணிகள் உள்ளடங்கலாக தினமும் பல்வேறு வேலைகள் இருப்பதாகவும் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்தே மக்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிவதற்காக நாளொன்றை ஒதுக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இனிவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்களின் முறைப்பாடுகளைக் கேட்டறிவதற்கு ஒதுப்படுவதுடன் அன்றைய தினம் அமைச்சர்கள் உள்ளடங்கலாக அனைத்து அரச உத்தியோகஸ்தர்களும் தத்தமது அலுவலகங்களில் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

யாழ் தேசிய கல்வியியல் கல்லூரி தமிழ் மன்றத்தின் கௌரவிப்பு நிகழ்வு.

(யாழ் லக்சன்) யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் மனோன்மனி சண்முகதாஸ் அவர்களுக்கான விசேட கௌரவிப்பு நிகழ்வானது நேற்றையதினம்(21.09.2020)மாலை 04.30...

சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – மத்திய மாகாண ஆளுனர்

கண்டி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் துரிதமாக ஆராய்வதோடு, அவற்றில் அபாயமுடைய கட்டடங்கள் காணப்படுமாயின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை...

அதாவுல்லாவின் உடையால் சபையில் வெடித்தது சர்ச்சை

பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அணிந்திருந்த உடைக்கு எதிர்ப்புத் தொரிவித்து பாராளுமன்றில் இன்று ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. பாராளுமன்ற நிலையியல் கட்டளை சட்டங்களை மீறி அதாவுல்ல உடையணிந்திருருந்ததாக சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அவரை சபையிலிருந்து...

முகப்புத்தக களியாட்டத்தில் போதைப்பொருட்களுடன் சிக்கிய 16 பேர் கைது

மாதுருஓயா பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகப்புத்தக களியாட்ட விருந்திற்கு சென்ற 16 இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பொலன்னறுவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஒருவகை போதைப்பொருள் 33, 17 கிராம்,...

பிரபல நடிகர் மரணம்; அதிர்ச்சியில் சினித்துறையினர்!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் வலம்வந்த ரூபன், தனது 54 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். அவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் விஜய்யின் கில்லி, தில், தூள் உள்பட பல படங்களில்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here