- Advertisement -
Home Srilanka கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த சுமார் 10 நாட்கள் ஆகக் கூடும் - விமானப்படை

கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த சுமார் 10 நாட்கள் ஆகக் கூடும் – விமானப்படை

- Advertisement -
நியூ டயமன் கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இன்று வரை ஒரு இலட்சம் லீற்றருக்கும் அதிகளவான கடல் நீர் பாய்ச்சப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த சுமார் 10 நாட்கள் ஆகக் கூடும் என விமானப்படை பணிப்பாளர் (கட்டுப்பாட்டு பிரிவு) வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி.ஜயசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கப்பல் தீப்பற்றியமை தொடர்பில் கடற்படையினரால் அறிவிக்கப்பட்டவுடனேயே விஷேட விமானமொன்று நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கண்காணிப்பு அறிக்கை கடற்படைக்கும் விமானப்படை தலைமையகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் வியாழக்கிழை காலை முதல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு உதவியாக பிரதொரு விமானமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் 3 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை கண்காணிப்பு அறிக்கைகள் புகைப்படங்கள் என்பவற்றை எமக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

இவை தவிர மேலும் இரு உலங்கு வானூர்திகள் அம்பாறையை மையப்படுத்தி தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஒரு இலட்சம் லீற்றருக்கும் அதிகளவான நீர் பாய்ச்சப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னரும் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்போது தீயை அணைப்பதற்கு 10 நாட்கள் சென்றன. இந்த தீயை அணைப்பதற்கும் அந்தளவான காலம் செல்லக் கூடும். தீ கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே புகையும் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...

வெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...

சடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி

நானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...

சஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...

20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here