- Advertisement -
Home Lifestyle கர்ப்பகாலத்தில் மூல நோய் ஏற்பட காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்?

கர்ப்பகாலத்தில் மூல நோய் ஏற்பட காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்?

- Advertisement -

பொதுவாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும் கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடல் பிரச்சனைகளில் மூல நோயும் ஒன்று. இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.

அந்தவகையில் இது ஏன் ஏற்படுகின்றது என்பதையும், இதனை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

ஏன் ஏற்படுகின்றது?

கர்ப்பிணிகளின் வயிற்றில் கரு வளர வளர அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படும். ஆசனவாய் குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதால் வீக்கம் உண்டாகும்.இதனால் சில கர்ப்பணிகளுக்கு அக்காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது அதுமட்டுமின்றி சிலருக்குப் மரபியல் மூலமாகவும் மூலநோய் வரலாம்.

இதனை தடுக்க என்ன சாப்பிடலாம்?

ஆமணக்கு இலையை நெய் விட்டு இளஞ்சூடாக வதக்கவும். இரவு தூங்கும் முன்பு, மூலம் உள்ள இடத்தில் வைத்து உறங்கலாம்.

அரை ஸ்பூன் கடுக்காய் தூளை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து இரவில் குடிக்க வேண்டும்.

துத்திக் கீரையை நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு கடைய வேண்டும்.

வாரம் இரண்டு முறை மதிய உணவுக்குப் பின் சாப்பிட்டு வரலாம். நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும்.

காலையும் மாலையும் துத்தி இலையை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு விழுங்கிய வுடன் மோர் குடிக்கலாம்.

மதிய உணவில், 5 சின்ன வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாப்பிடும் பழக்கம் இருப்பவர் களுக்கு பைல்ஸ் வராது.

அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலை அதை நன்கு மென்று சாப்பிடவும். அந்த நீரையும் குடித்து விடுங்கள்.

மாதுளை தோலை சுத்தம் செய்து விட்ட பின் நீரில் போட்டு கொதிக்க விட்ட பின்னர் அதை வடிகட்டி அந்த நீரை குடித்து வரலாம்.

தவிர்க்க வேண்டியவை சப்பாத்தி, பரோட்டா இரும்பு சத்து மாத்திரைகள் காரம், புளிப்பு உணவுகள் அதிகமான அசைவ உணவுகள் பீட்சா, பர்கர் சீஸ் உள்ள பேஸ்டி உணவுகள் பசை போல இழுக்கின்ற உணவுகள் மைதா உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here