- Advertisement -
Home Srilanka கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

- Advertisement -

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட உப மின் தயாரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த குடும்பஸ்த்தர் ஒருவர் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 04.09.2020 அன்று வெள்ளிகிழமை மதியம் இந்த சடலம் இனங்காணபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கெசல்கமுவ ஓயா பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற நபர் ஒருவரினால் மேற்படி சடலம் மிதந்து கொண்டிருப்பதை இனங்கண்டு பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்பட்ட பின் பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமைக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

குறித்த குடும்பஸ்த்தர் காலை 07.30 மணியளவில் வீட்டில் இருந்து தோட்டத்தில் உள்ள உபமின் நிலையத்திற்கு தொழிலுக்காக சென்றதாகவும், சடலமாக மீட்கபட்ட நபர் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் கீழ்பிரிவை சேர்ந்த 42வயதுடைய ஆறுமுகம் ரவிகுமார் மூன்று பிள்ளைகளின் தந்தையென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலம் அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவானினால் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here