- Advertisement -
Home Srilanka சிங்கராஜவனம் அச்சுறுத்தலில் இருப்பதாக யுனெஸ்கோவிற்கு மங்கள சமரவீர கடிதம்

சிங்கராஜவனம் அச்சுறுத்தலில் இருப்பதாக யுனெஸ்கோவிற்கு மங்கள சமரவீர கடிதம்

- Advertisement -

சிங்கராஜவனத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் சுட்டிக்காட்டி, அதனைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பிற்கு (யுனெஸ்கோ) கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அஸோலேவிற்கு அவர் அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில், 1988 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமையாக அங்கீகரிக்கப்பட்ட சிங்கராஜவனம் தற்போது அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சிங்கராஜவனத்தை அண்டிய வீதியை விரிவாக்குவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை நிறுத்தப்பட்டது. எனினும் சிங்கராஜவனத்தின் எல்லையில் அமையக்கூடிய வகையில் லங்காகமவில் இருந்து தெனியாயவிற்கு இலங்கை இராணுவம் வீதியொன்றை அமைக்கும் பணியை முன்னெடுத்துவருவது கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வெளிப்படுத்தப்பட்டது. இந்த நிர்மாணப்பணியில் பாரிய கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதும் பெரிய மரங்கள் வெட்டப்படுவதும் சிங்கராஜவனத்திற்கு குறுங்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

எனவே இதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடுத்து வீதி நிர்மாணம் ஆகஸ்ட் 19 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் ஆகஸ்ட் 29 ஆம் திகதி அப்பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, சூழலுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் 90 நாட்களுக்குள் லங்காகம தொடக்கம் நெலுவ வரையிலான வீதியை நிர்மாணித்து முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

சிங்கராஜவனத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய இந்த வீதி நிர்மாணத்திட்டம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு சூழலியலாளர்களும் சுற்றாடல் மற்றும் இயற்கை தொடர்பான கற்கைநெறிக்கான நிலையமும் யுனெஸ்கோ அமைப்பிற்கு முறைப்பாடு செய்திருக்கின்றது.

அதுமாத்திரமன்றி இதனை நிறுத்துமாறு வலியுறுத்தி மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான இணையம் மூலமான மனுவொன்றையும் அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். எனவே இவையனைத்தையும் கருத்திற்கொண்டு, சிங்கராஜவனத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவாறான இந்த வீதி நிர்மாணத்தைக் கைவிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று அவர் கோரியிருக்கின்றார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...

ஹர்த்தாலுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு!

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம்...

20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது எனவும் இதன் மூலம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here