- Advertisement -
Home Srilanka திருக்கோவில் பிரதேத்தில் இல்மனைட் அகழ்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருக்கோவில் பிரதேத்தில் இல்மனைட் அகழ்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

- Advertisement -

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டாம் என மக்கள் ஆர்ப்பாட்டம்

அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக திருக்கோவில் மற்றும் தாண்டியடி மக்கள் எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டமானது இன்று சனிக்கிழமை(5) காலை தாண்டியடி பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்து பிரதான வீதியாக பேரணியாக சென்று தாண்டியடி பஸ்தரபிடத்திற்கு முன்பான இருந்து வாகன பேரணியாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை பேரணி வந்திருந்தன.

திருக்கோவில் பிரதேசத்தில் 2018ம் ஆண்டு இல்மனைட் அகழ்வுக்கான முன்னெடுப்புக்கள் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டு இருந்த வேனை அப்போது மக்கள் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்த நிலையில் இல்மனைட் அகழ்வு வேலைகள் இடைநிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் மீண்டும் கடந்த வாரம் திருக்கோவில் தாண்டியடி கடற்கரையில் அரச துறைசார் அதிகாரிகள் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இருந்த நிலையில் மக்கள் மீண்டும் இவ் இல்மனைட் அகழ்வுக்கு அரசு அனுமதி வழங்க வெண்டாம் என கோரிக்கையை முன்வைத்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து திருக்கோவில் மற்றும் தாண்டியடி மக்கள் நடைபவனியாக திருக்கோவில் பிரதேச செலயத்திற்குச் சென்று இங்கு பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனிடம் இல்மனைட் அகழ்வுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டாம் என்ற கோரிக்கை மனுவை கையளித்து இருந்தனர்.

இவ் ஆரப்பாட்ட பேரணிகளில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பொத்துவில் பிரதேசசபை உப தவிசாளர் பி.பார்த்தீபன் சபை உறுப்பினர் ரீ.சுபோதரன் மக்கள் செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் ஆகியோர் தமது கருத்துக்களை தெரிவித்து இருந்ததுடன்; 100க்கு மேற்பட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG 20200905 100416 IMG 20200905 094653 IMG 20200905 100957 IMG 20200905 094819 IMG 20200905 101411 IMG 20200905 095117 IMG 20200905 100841

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...

ஹர்த்தாலுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு!

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம்...

20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது எனவும் இதன் மூலம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here